/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஒரே நாளில் இரண்டு டூவீலர்கள் திருட்டு
/
ஒரே நாளில் இரண்டு டூவீலர்கள் திருட்டு
ADDED : டிச 01, 2025 06:16 AM
பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரு டூவீலர்களை மர்ம நபர்கள், திருடிச் சென்றதால் பொதுமக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
தென்கரை இடுக்கடிலாட் தெரு முத்துச்சாமி 51. வீட்டின் முன் இரவில் டூவீலரை நிறுத்தி பூட்டி விட்டு காலையில் பார்க்கும்போது, டூவீலர் திருடு போனது. இதே போல் டி.கள்ளிப்பட்டி வைரமுத்து தெரு குணா 30. இவரும் வீட்டின் முன் தனது டூவீலரை நிறுத்திவிட்டு காலையில் பார்க்கும்போது மர்ம நபர்கள் டூவீலரை திருடிச் சென்றனர்.
பெரியகுளம் பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரு டூவீலர்கள் திருட்டு போனது பொது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் தனிப்படை அமைத்து உடனே திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

