தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆயுள் காப்பீடு முகவர் சேர்க்கைக்கு வரவேற்பு

ஆயுள் காப்பீடு முகவர் சேர்க்கைக்கு வரவேற்பு

ஆயுள் காப்பீடு முகவர் சேர்க்கைக்கு வரவேற்பு


ADDED : ஜூன் 09, 2026 07:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 07:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி, ஜூன் 10–

தபால்துறையில் ஆயுள் காப்பீடு விற்பனை செய்ய ஒப்பந்த முறையில் முகவர்கள் சேர்க்கை நடக்க உள்ளதாக தேனி மண்டல கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்தார்.

முகவர்களாக விரும்புபவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுய தொழில் செய்வோர், முன்னார் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள், ஓய்வு அரசு ஊழியர்கள், கல்லுாரி மாணவர்களாக இருக்கலாம். தகுதிபெறும் முகவர்கள் தபால் அலுவலகத்தில் தங்கள் பெயரில் ரூ.5000 சேமிப்பு பத்திர கணக்கு துவங்கி ஜனாதிபதி பெயரில் பதிவு செய்ய வேண்டும். ஒப்பந்த காலம் முடியும்போது பணம் திருப்பி தரப்படும். அருகில் உள்ள தலைமை, துணை தபால் அலுவலகங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர், தேனி கோட்டம், 625 531 என்ற முகவரிக்கு ஜூன் 12க்குள் அனுப்ப வேண்டும். ஜூன் 16 ல் மதியம் 3:00 மணிக்கு தேனி கோட்டக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கும் நேர்காணலில் தேவையான சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us