பஸ் ஸ்டாண்டிற்குள் இடையூறு டூவீலர்கள்: பறிமுதல் செய்ய முடிவு
பஸ் ஸ்டாண்டிற்குள் இடையூறு டூவீலர்கள்: பறிமுதல் செய்ய முடிவு
ADDED : பிப் 06, 2026 05:52 AM
தேனி: தேனி கர்னல் ஜான்பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்டில் இடையூறாக நிறுத்தப்படும் டூவீலர்களை பறிமுதல் செய்ய நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூறியதாவது: பஸ் ஸ்டாண்டில் நகராட்சி மூலம் 3 டூவீலர் ஸ்டாண்டுகள் உள்ளன. ஆனால், நுழைவு பகுதியில் போலீசார், போக்குவரத்து கழக பணியாளர்கள், பிற அரசுத்துறை யினர் டூவீலர்களை நிறுத்தி செல்வது வாடிக்கையாக உள்ளது. இதனால் அப்பகுதி டூவீலர்கள் நிறுத்தமாக மாறி உள்ளது.
சிலர் டூவீலர்களை பல நாட்கள் நிறுத்தி செல்கின்றனர்.அலுவலர்களை நுழைவு வாயில் பகுதியில் டூவீலர்களை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்துமாறு போக்குவரத்துகழகம், போலீசாருக்கு நகராட்சி கடிதம் வழங்கி உள்ளது. ஆனாலும் டூவீலர்கள் இடையூறாக நிறுத்துவது தொடர்கிறது.டூவீலர்களை சங்கிலியால் பூட்டி பறிமுதல் செய்யவும்,அபராதம் செலுத்திய பின் விடுவிக்க ஆலோசித்துள்ளோம் என்றனர்.
