நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: அல்லிநகரம் கிழக்குத் தெரு சாந்தி. குடும்ப பிரச்னையால் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.
பொம்மையக்கவுண்டன்பட்டிக்கு சென்று வருவதாக கூறியவர், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் அருகே விஷம் குடித்து மயங்கி னார்.
அக். 23 முதல் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இறந்தார்.
வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
தேனி: வீரபாண்டி வயல்பட்டி பிள்ளையார் கோயில் தெரு ஈஸ்வரி 44. மகளை மைத்துனருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், மகள் வேறு ஒருவருடன் சென்று விட்டதால் விரக்தியில் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

