ADDED : பிப் 11, 2026 07:02 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி ரோட்டில் உள்ள முத்தமிழ் பூங்காவை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 ஆண்டுக்கு முன் ஆண்டிபட்டி பகுதி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்ட பூங்கா கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லை. பூங்காவில் குழந்தைகளுக்காக அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் சேதம் அடைந்து விட்டன.
மது அருந்துபவர்கள், புகை பிடிப்பவர்கள் பூங்காவை ஆக்கிரமித்துக் கொண்டதால் பொதுமக்கள் வந்து செல்ல தயக்கம் காட்டுகின்றனர். பூங்கா வளாகத்தில் கிடக்கும் காலி மதுபாட்டில் குப்பை, செடிகொடிகள் அப்புறப்படுத்தப்படு வதில்லை. பூங்கா பராமரிப்புக்கு நிரந்தரமாக பணியாளர் நியமித்து பொதுமக்கள், குழந்தைகள், முதியோர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை பூங்காவில் கழிப்பதற்கான வசதி செய்து கொடுக்க பேரூராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.
