திட்டமிடாத கட்டுமான பணி மழை நீர் புகுந்து பாதிப்பு
திட்டமிடாத கட்டுமான பணி மழை நீர் புகுந்து பாதிப்பு
UPDATED : அக் 21, 2026 11:33 PM
ADDED : அக் 21, 2026 06:58 PM

கூடலுார்: கூடலுாரில் ரூ.8.26 கோடி மதிப்பீட்டில் நடந்து வரும் சுள்ளக்கரை ஓடை கட்டுமான பணியில் முறையான திட்டமிடாதால் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடலுாரில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழைநீர் சுள்ளக்கரை ஓடை வழியாக வெளியேறி முல்லைப் பெரியாற்றில் கலக்கும். இந்த ஓடை ஆக்கிரமிப்பால் சுருங்கி மழை பெய்யும் போது தண்ணீர் ஓடை வழியாக வெளியேறாமல் நெடுஞ்சாலையில் ஓடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் சில மாதங்களுக்கு முன் ரூ.8.26 கோடி மதிப்பீட்டில் ஓடையை ஆழப்படுத்தி பக்கவாட்டில் காங்கிரீட் தடுப்பு அமைக்கும் பணி துவங்கியது. பருவமழை காலங்களில் மழை நீர் அதிகமாக வரும் என தெரிந்திருந்தும் அதை வெளியேற்ற சரியான திட்டமிடாததால் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் வெளியேறிய நீர் கட்டுமான பணி நடந்து வரும் ஓடைக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. அங்கிருந்து மீண்டும் மாநில நெடுஞ்சாலையில் ஓடி மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கியது. பள்ளிக்கு அருகில் தற்போது குளம் போல் தேங்கியுள்ளது. கட்டுமான பணியை அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு செய்து சரியான திட்டமிடுதலோடு பணிகள் செய்ய அறிவுறுத்த வேண்டும்.
