/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பூச்சிமருந்து தெளிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்க வலியுறுத்தல்
/
பூச்சிமருந்து தெளிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்க வலியுறுத்தல்
பூச்சிமருந்து தெளிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்க வலியுறுத்தல்
பூச்சிமருந்து தெளிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்க வலியுறுத்தல்
ADDED : டிச 13, 2025 05:36 AM
சின்னமனூர்: பூச்சி மருந்து தெளிப்பவர்களுக்கு முறையான பயிற்சியை ஒவ்வொரு வட்டாரத்திலும் வேளாண் துறை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேனி வேளாண், தோட்டக்கலை மாவட்டமாகும். இங்கு பயிர்களுக்கு உரமிடுதல்,பூச்சி மருந்து தெளித்தல் பணி அதிகம் நடைபெறுகிறது. திராட்சை, வாழை, காய்கறி பயிர்கள், நெல், கரும்பு, பருத்தி உள்ளிட்ட பல்வேறு பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் போது பலர் மூச்சு திணறி பலியாகி வருகின்றனர்.
கடந்தாண்டு சின்னமனூரில் பூச்சி மருந்து தெளிப்பவர்களுக்கு பயிற்சி நடத்தப்பட்டது. அதில் பூச்சி மருந்தினை எந்த நேரத்தில் தெளிக்க வேண்டும், தெளிப்பதற்கு முன்பு பின்பற்றப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், தெளித்த பின் கை, கால்கள் மற்றும் உடம்பை சுத்தம் செய்வது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
இதில் இன்னும் நவீன உத்திகளை விளக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதம் ஒரு முறை இது குறித்த விழிப்புணர்வு பிரசாரங்களை வேளாண் துறை முன்னெடுக்க வேண்டும். பூச்சி மருந்து தெளிப்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

