உசிலம்பட்டி - போடி 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்
உசிலம்பட்டி - போடி 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரம்
ADDED : மார் 11, 2024 07:03 AM
அ நிறம் | அளவு
தேனி: கொச்சி தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை தேனி வழியாக செல்கிறது.
இந்த ரோடு மாவட்டத்தில் போடி முதல் உசிலம்பட்டி வரையிலான 72 கி.மீ., ரோடு இருவழிப்பாதையாக உள்ளது. இதனை ரூ.700 கோடி செலவில் 4 வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் சில மாதங்களுக்கு முன் துவங்கியது. உசிலம்பட்டி முதல் போடி விலக்கு வரையிலான ரோடு அமைப்பதற்கான சாத்திய கூறுகள் பற்றி ஆய்வு செய்யும் பணிகள் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த பணியில் தனியார் நிறுவனம் சார்பில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வருகின்ற போது, தற்போது உள்ள ரோடு மாநில நெடுஞ்சாலையிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
