ADDED : டிச 12, 2025 04:17 AM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் வைகை அணை நீர்மட்டம் அக்., 27ல் 70.24 அடியாக உயர்ந்தது(மொத்த உயரம் 71 அடி). அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் 2ம் போக பாசனத்திற்காக கால்வாய் வழியாக சில வாரங்களாக தொடர்ந்து நீர் வெளியேறுகிறது.
நேற்று காலை கால்வாய் வழியாக வினாடிக்கு 700 கன அடியாக இருந்த நீர் வெளியேற்றம் வினாடிக்கு மதியம் 2:00 மணிக்கு வினாடிக்கு 1300 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணையிலிருந்து விருதுநகர் மாவட்டம் கிருதுமால் நதி தண்ணீர் தேவைக்காக வினாடிக்கு 650 கன அடி, குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி என வினாடிக்கு 2019 கன அடி நீர் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 64.37 அடியாக இருந்தது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1539 கன அடி.
