ADDED : ஏப் 01, 2026 05:18 PM
அ நிறம் | அளவு
தேனி:பெரியகுளம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் வி.சி.க., வேட்பாளர் சக்திவேல் அறிமுக கூட்டம் தேனியில் நடந்தது. இதில் வி.சி.க. மாவட்ட செயலாளர் சுசி தமிழ் பாண்டியன், மண்டல செயலாளர் ரபீக், மண்டல துணை செயலாளர் நாகரத்தினம், முன்னாள் மண்டல செயலாளர் தமிழ்வாணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது வேட்பாளர் சக்திவேலை, கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தினர்.
மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது எப்படி செயல்பட்டு ஓட்டுக்களை பெற வேண்டும், கூட்டணி கட்சி தொண்டர்களுடன் எப்படி இணக்கமாக பணி செய்ய வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அறிவுறுத்தினர்.
