ADDED : ஜன 31, 2025 12:13 AM
பெரியகுளம்; பெரியகுளம் ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு சம்பள பாக்கியை மத்திய அரசு வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
ஊராட்சிகளில் நூறு நாள் வேலைக்கான 'ஜாப்கார்டு' வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி, இளங்கோவன், காளிமுத்து, முருகன், மன்னர்மன்னன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கடமலைக்குண்டு: அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சங்கரசுப்பு தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ராஜாராம், ஒன்றிய செயலாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூ., ஒன்றிய செயலாளர் போஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.