UPDATED : ஏப் 29, 2026 09:58 PM
ADDED : ஏப் 29, 2026 08:41 PM
தேனி:வீரபாண்டி கோயில் பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்புகளால் பக்தர்கள் சிரமம் அடைகின்றனர்.
வீர்பாண்டி கவுமாரியம்மன் கோயில் அருகில் உள்ள பஸ் ஸ்டாப்பை, கோயிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பஸ் ஸ்டாப்பை மறைக்கும் வகையில் வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்து ஆக்கிரமித்துள்ளனர். 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை பஸ் ஸ்டாப் முன் நிறுத்துவதால் பஸ் ஏற வரும் பயணிகள் ரோட்டில் நிற்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. இதனால் பயணிகள், ஆட்டோ டிரைவர்கள் இடையே மோதல் ஏற்படுவதும், அதை போலீசார் சரிசெய்வதும் வாடிக்கையாக உள்ளது.
பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்புகளை அகற்ற பக்தர்கள பலமுறை வீரபாண்டி பேரூராட்சிக்கும், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். எனினும் ஆக்கிரமிப்பை அகற்ற முன்வரவில்லை. மே 12 முதல் 19 வரை வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடக்கிறது. இதனால் லட்சக்கணக்கில் பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள். எனவே ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
