/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உபரி நீர் செல்ல வழியில்லாத வீரப்ப நாயக்கன் குளம்
/
உபரி நீர் செல்ல வழியில்லாத வீரப்ப நாயக்கன் குளம்
ADDED : அக் 24, 2025 02:47 AM
கம்பம்: கம்பம் வீரப்ப நாயக்கன் குளத்தில் உபரி நீர் செல்ல வழியில்லாத நிலை உள்ளதால், தற்போதுள்ள சூழலில் கண்மாய் கரைகள் உடையும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனம் நடந்தாலும், ஒவ்வொரு ஊரிலும் கணிசமான நிலங்கள் கண்மாய் பாசனத்தில் உள்ளன. பாசன வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் பயன்படும் விதத்தில் தண்ணீர் நிரப்பி வைக்கப்படும்.
இது தவிர மழை வெள்ள காலங்களில் ஏற்படும் வெள்ள நீர், கண்மாய்களில் தேக்கி வைக்கப்படும். கம்பத்தில் வீரப்ப நாயக்கன்குளம், ஒட்டு ஒடப்படி குளங்கள், உத்தமபாளையம் தாமரைகுளம், குப்பிசெட்டி குளம், சின்னமனுார் உடைய குளம், செங்குளம், கருங்கட்டான்குளம் முக்கியமானவைகளாகும்.
இந்த கண்மாய்களில் உபரி நீர் வெளியேற வழியில்லாத கண்மாயாக கம்பம் வீரப்பன் நாயக்கன்குளம் உள்ளது. மழை வெள்ளம் வரும் போது கரைகள் உடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
எனவே நீர்வளத்துறையினர் உடனடியாக கம்பம் வீரப்பன் நாயக்கன் குளத்தில் உபரி நீர் செல்ல வழி ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

