/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்கள் பறிமுதல்; மூவர் கைது
/
போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்கள் பறிமுதல்; மூவர் கைது
போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்கள் பறிமுதல்; மூவர் கைது
போக்குவரத்துக்கு இடையூறு வாகனங்கள் பறிமுதல்; மூவர் கைது
ADDED : ஆக 26, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: க.விலக்கு அருகே தனியார் மண்டபத்தில் நடந்த காதணி விழாவில் பங்கேற்க சென்றவர்கள் வாகனங்களை கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் க.விலக்கு அருகே நிறுத்தி போக்கு வரத்துக்கு இடையூறு செய்தனர். இதனால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டது.
அந்த வழியாக சென்ற க.விலக்கு எஸ்.எஸ்.ஐ., சிவகுமார் ரோட்டில் இடையூறாக நிறுத்தப்பட்ட டிராக்டர்கள், லாரியை பறிமுதல் செய்து, வாகனங்களை ரோட்டில் நிறுத்தி இடையூறு செய்த முத்தனம்பட்டியைச் சேர்ந்த கேசவன் 25, பால்பாண்டி 38, மரிக்குண்டு பழனிவேல்ராஜன் 27, ஆகியோரை கைது செய்தார்.