ADDED : ஏப் 23, 2026 10:56 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட வெள்ளிமலை ஓட்டுச்சாவடியில் மொத்தமுள்ள 5 ஓட்டுகளில் 4 ஓட்டுகள் பதிவானது. வெள்ளிமலையில் துரைசாமி மரகதம் ஆரம்ப பள்ளியில் ஓட்டுச்சாவடி அமைந்துள்ளது.
இந்த ஓட்டுச்சாவடியில் 3 ஆண்கள், இரு பெண்கள் உட்பட 5 வாக்காளர்கள் உள்ளனர். தேனியில் இருந்து 6 மணி நேரம் பயணம் மேற்கொண்டு தேர்தல் அலுவலர்கள் இந்த ஓட்டுச்சாவடியை சென்றடைந்தனர். ஓட்டுப்பதிவின் போது பட்டியலில் இடம் பெற்றிருந்த 4 வாக்காளர்கள் காலை 9:00 மணிக்கு முன்பே ஓட்டளித்தனர். ஒருவர் ஓட்டளிக்கவில்லை.
