/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வயலட் செவ்வந்தி விளைச்சல், விலை இன்றி விவசாயிகள் கவலை
/
வயலட் செவ்வந்தி விளைச்சல், விலை இன்றி விவசாயிகள் கவலை
வயலட் செவ்வந்தி விளைச்சல், விலை இன்றி விவசாயிகள் கவலை
வயலட் செவ்வந்தி விளைச்சல், விலை இன்றி விவசாயிகள் கவலை
ADDED : டிச 17, 2025 05:51 AM

போடி, போடி பகுதியில் புதிதாக அறிமுகமான சாந்தினி வயலட் செவ்வந்தி பூக்கள் போதிய விளைச்சல், விலை இன்றி விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
உப்புக்கோட்டை, பாலார்பட்டி பகுதியில் மஞ்சள், வெள்ளை செவ்வந்தி பூக்கள் பயிரிட்டுள்ளனர். தற்போது புதிய அறிமுகமான சாந்தினி வயலட், பூர்ணிமா தேன் கலர் செவ்வந்தி பயிரிட்டு உள்ளனர். அதிக அளவு பனிப்பொழிவு இல்லாத காலங்களில் செவ்வந்தி பூக்கள் நன்கு வளர்ச்சி இருக்கும். செவ்வந்தி பூக்கள் மாலை கட்டுவதற்கு அதிகம் பயன்படுகின்றன.
கடந்த ஆண்டு மஞ்சள், வெள்ளை செவ்வந்தி பூக்கள் விலை கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரை இருந்தது. இந்த ஆண்டு சீசன் துவங்கிய நிலையில் வெள்ளை, மஞ்சள் பூக்கள் கிலோ ரூ. 80 முதல் ரூ.100 ஆக விலை குறைந்துள்ளது. புதிய அறிமுகமான சாந்தினி வயலட், பூர்ணிமா தேன் கலர் செவ்வந்தி பூக்கள் மாலைகளுக்கு இடையே கட்டுவதற்கு பயன் படுத்துகின்றனர். கடந்த ஆண்டு கிலோ ரூ. 120 முதல் ரூ. 140 வரை இருந்தது. தற்போது கிலோ ரூ.60 முதல் ரூ. 80 ஆக விலை குறைந்து உள்ளது.
வியாபாரிகள் சில்லறை விலையில் மஞ்சள், வெள்ளை செவ்வந்தி கிலோ ரூ.120 முதல் ரூ.160 வரையும், வயலட் செவ்வந்தி கிலோ ரூ.120 முதல் ரூ.130க்கு விற்பனை செய்கின்றனர். செவ்வந்தி பூக்கள் போதிய விளைச்சல் இல்லை. உரிய விலையும் கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
விவசாயி காசிராஜன் கூறுகையில், ' சமீபத்தில் பெய்த மழையால் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு செவ்வந்தி பூக்கள் போதிய விளைச்சல் இன்றி விலையும் குறைந்து உள்ளது. மஞ்சள், வெள்ளை செவ்வந்தி காட்டிலும் சாந்தினி வயலட் செவ்வந்தி கிலோவிற்கு ரூ. 40 முதல் ரூ.50 வரை விலை குறைந்து உள்ளது. சபரிமலை சீசன் நாட்களில் செவ்வந்தி பூக்கள் விலையும் இல்லாதது கவலை தான்,' என்றார்.

