ADDED : பிப் 12, 2026 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் 2026ல் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கோவிந்தராவ் தலைமையில் கலெக்டர் ரஞ்சீத்சிங் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
தேர்தல் தொடர்பான புகார்களில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இறுதி வாக்காளர் பட்டியல்வெளியீட்டிற்கான பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
டி.ஆர்.ஓ., ராஜகுமார், சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் ரஜத்பீடன், செய்யது முகமது, நல்லையா, கவிதா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

