ADDED : நவ 26, 2026 04:53 PM

அ நிறம் | அளவு
தேனி: தேனியில் இன்று (நவ.,26) வாக்காளர் சிறப்பு முகாம் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பெரியகுளம் சப்–கலெக்டர் தவலேந்து கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வகித்தார். தேனி நகராட்சி கமிஷனர் பார்கவி முன்னிலை வகித்தார். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலம் மதுரை ரோட்டில் உள்ள ஆர்.சி., மேல்நிலைப்பள்ளி முதல் பெரியகுளம் ரோடு பிரசன்ட் கான்வென்ட் பள்ளி வரை நடந்தது. வாக்காளர் விழிப்புணர்வு குறித்து மாணவர்கள் கோஷம் எழுப்பி சென்றனர்.
