தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ வாக்காளர் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி துவக்கம்

 வாக்காளர் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி துவக்கம்

 வாக்காளர் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி துவக்கம்


ADDED : ஜன 03, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2026 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியின் போது படிவங்களை சரிவர பூர்த்தி செய்யாத வாக்காளர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி துவங்கியது.

தமிழகத்தில் நவ.,4 முதல் டிச.,14 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடந்தது. டிச.,19ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. சிறப்பு திருத்த பணியின் போது 2002 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்கள், உறவினர்கள் விவரங்களை சிலர் சரியாக பூர்த்தி செய்யவில்லை. மாவட்டத்தில் சரியாக பூர்த்தி செய்யாத 12,572 பேருக்கு தேர்தல் ஆணையம் உதவி வாக்குபதிவு பதிவு அலுவலர்கள் மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அவர்கள் குறிப்பிட்ட 12 அரசு வழங்கிய அடையாள சான்றிதழ்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மாவட்டத்தில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று தாலுகா, நகராட்சி அலுவலகங்களில் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்று சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us