ADDED : மார் 24, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஓட்டுப்பதிவு கட்டாயம் என்பதை வலியுறுத்தி ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டில் ஆண்டிபட்டி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
ஏப்ரல் 23ல் பொதுமக்கள் அனைவரும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து ஓட்டுப் பதிவு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். தங்களுக்கான ஓட்டு உரிமையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஓட்டுப் பதிவு குறித்து துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி தாசில்தார் ஜாகிர் உசேன், வட்டவழங்கல் அலுவலர் காசிநாதன் உட்பட பலர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
