/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் டிசம்பரில் முதற்கட்ட ஆய்வு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் டிசம்பரில் முதற்கட்ட ஆய்வு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் டிசம்பரில் முதற்கட்ட ஆய்வு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் டிசம்பரில் முதற்கட்ட ஆய்வு
ADDED : நவ 19, 2025 06:23 AM
தேனி: சட்டசபை தேர்தலுக்காக டிச., முதல் வாரத்தில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி உள்ளது.
இதற்காக சில மாதங்களுக்கு முன் பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்தில் இருந்து ஓட்டுபதிவு இயந்திரங்கள் தேனி ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு கொண்டு வரப்பட்டன. பாதுகாப்பு அறையில் ஏற்கனவே லோக்சபா தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப் பட்டுள்ளன.
சட்டசபை தேர்தலுக்காக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட ஆய்வு டிச., முதல் வாரத்தில் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் பிரிவினர் துவங்கி உள்ளனர்.
இயந்திரங்கள் ஆய்வு பணியில் பெல் நிறுவன பொறியாளர்கள் ஈடுபட உள்ளனர்.