ADDED : மார் 13, 2026 07:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி மாவட்ட சுகாதார அலுவலகம் முன் மக்களைதேடி மருத்துவ திட்ட பணியாளர்கள் 'பணி நிரந்தரம், மாத சம்பளம் ரூ.15,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜெயபாண்டி தலைமை வகித்தார். செயலாளர் சண்முகம், மருத்துவ திட்ட பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ரெபகால் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

