UPDATED : ஜூன் 02, 2026 04:55 PM
ADDED : ஜூன் 02, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
கம்பம்;வறண்டிருந்த சுருளி அருவியில் ஜூன் 2 பெய்த மழை காரணமாக லேசாக நீர் வரத்து ஏற்பட்டது.
சுருளி அருவி அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருப்பதால் அங்கு வரும் தண்ணீர் அதிக குளிர்ச்சி மூலிகை தன்மை வாய்ந்ததாகும். கோடையில் அருவியில் தண்ணீர் வரத்து இருக்காது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் மே வரை வறண்டு இருக்கும். இந்தாண்டும் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக வறண்டிருந்த சுருளி அருவியில் மே 2 ல் லேசாக தண்ணீர் விழ துவங்கியது.
இதனை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். பின் நீர் வரத்து இல்லை. இந்நிலையில் காலை முதல் அருவியில் லேசாக தண்ணீர் கொட்ட துவங்கியுள்ளது இதனால் சந்தோஷமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து திரும்புகின்றனர்.
