/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வருஷநாட்டில் தொடரும் மழை மூல வைகை ஆற்றில் நீர்வரத்து
/
வருஷநாட்டில் தொடரும் மழை மூல வைகை ஆற்றில் நீர்வரத்து
வருஷநாட்டில் தொடரும் மழை மூல வைகை ஆற்றில் நீர்வரத்து
வருஷநாட்டில் தொடரும் மழை மூல வைகை ஆற்றில் நீர்வரத்து
ADDED : அக் 17, 2025 01:54 AM

கடமலைக்குண்டு: வைகை அணை நீர் பிடிப்பு பகுதியான வருஷநாடு மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மூல வைகை ஆற்று நீர் இந்த ஆண்டில் முதல்முறையாக வைகை அணையில் சேர்ந்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை வருஷநாடு மலைப்பகுதியில் மழைக்காலத்தில் உற்பத்தியாகும் பல சிற்றாறுகள் ஒன்று சேர்ந்து வாலிப்பாறை அருகே மூல வைகை ஆறாக வாலிப்பாறை, தும்மக்குண்டு, முருக்கோடை, வருஷநாடு, கடமலைக்குண்டு, துரைசாமிபுரம், கண்டமனூர், அம்மச்சியாபுரம் வழியாக வைகை அணை சென்றடைகிறது. வருஷநாடு மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை அடுத்தடுத்து தொடர்கிறது.
மூலவைகை ஆறு கண்டமனூர் வரை மணல் பாங்கான பகுதி என்பதால் ஆற்றில் வரும் நீர் அடுத்தடுத்த கிராமங்களை மெதுவாக சென்றடைகிறது. தொடர்ச்சியாக நீர் வரத்து இருப்பதால் மூல வைகை ஆற்று நீர் நேற்று வைகை அணை சென்று சேர்ந்தது.
கடந்த சில மாதங்களாக மூல வைகை ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் குடிநீர் உறைகிணறுகள், பாசனக்கிணறுகள், போர்வெல்களில் நீர் சுரப்பு குறைந்தது. தற்போது நீர் சுரப்பு அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மூல வைகை ஆறு மூலம் வைகை அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 93 கன அடி நீர்வரத்து இருந்தது.