/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : நவ 25, 2025 03:38 AM

ஆண்டிபட்டி: நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் வைகை அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கடந்த 3 நாட்களாக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலான மழை பெய்து வருகிறது. வைகை அணைக்கு முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடி ஆறு, வருஷநாடு வைகை ஆறுகள் மூலம் நீர் வரத்து கிடைக்கும். பெரியாறு அணையில் இருந்து வினாடிக்கு 323 கனஅடி வீதம் திறக்கப்பட்ட நீரில் குறைந்த அளவு மட்டுமே வைகை அணைக்கு சென்றது.
வருஷநாடு மலைப்பகுதியில் பெய்த மழையால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை வைகை அணைக்கு வினாடிக்கு 481 கன அடியாக இருந்த நீர் வரத்து படிப்படியாக உயர்ந்து மதியம் 2:00 மணிக்கு வினாடிக்கு 3126 கன அடியாக இருந்தது.
அணை நீர்மட்டம் 61.38 அடி.( மொத்த உயரம் 71 அடி). அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 800 கன அடி, மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வெளியேறுகிறது.

