தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

 பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

 பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு


ADDED : மார் 26, 2026 03:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 03:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு வினாடிக்கு 256 கன அடியில் இருந்து 356 கன அடியாக அதிகரிக்கப் பட்டது. இதனால் நீர் மட்டம் மேலும் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது

முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் மழையின்றி கடுமையான வெப்பம் நிலவுகிறது. அணைக்கு நீர்வரத்து 'ஜீரோ' ஆக உள்ளது. இதனால் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப் படி 113.2 அடியாக குறைந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர் இருப்பு 1425 மில்லியன் கன அடியாகும்.

அதிகரிப்பு அணை நீர்மட்டம் குறைந்து வந்த போதிலும் தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 256 கன அடியாக இருந்த நீர் திறப்பை 356 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருவதால் கம்பம் பள்ளத்தாக்கில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் நீர் திறப்பை மேலும் அதி கரித்துள்ளதால் நீர்மட்டம் மேலும் குறையும். மதுரை குடிநீருக்காக லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து நேரடியாக குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப் படுகிறது.

மதுரைக்கு கொண்டு செல்லப்படும் நீரின் அளவை அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. ஆற்றில் நீர்வரத்து குறைந்து நிலத்தடி நீர்மட்டமும் குறையும் ஆபத்து உள்ளது.

கம்பம் பள்ளத்தாக்கில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் மதுரைக்கு கொண்டு செல்லப்படும் நீரின் அளவையும் குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us