ADDED : ஏப் 26, 2026 01:23 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பல நாட்களாக கடுமையான வெப்பம் நிலவுவதால் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 110.20 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 152 கன அடி. நீர் இருப்பு 943 மில்லியன் கன அடியாகும். நீர்ப் பிடிப்பில் மழை பதிவாகவில்லை.
அணையின் நீர்மட்டம் குறைந்ததால் தமிழகப் பகுதிக்கு குடிநீருக்காக திறக்கப்பட்டிருந்த 200 கன அடி நீர், நேற்று காலை 6:00 மணியிலிருந்து வினாடிக்கு 150 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் தேனி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை அபாயம் உள்ளது.
