தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ சுருளி அருவிக்கு நீர் வரத்து துவங்கியது

சுருளி அருவிக்கு நீர் வரத்து துவங்கியது

சுருளி அருவிக்கு நீர் வரத்து துவங்கியது


ADDED : செப் 13, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கம்பம், செப். 14

இரவங்கலாறு, மணலாறு பகுதிகளில் நேற்று மாலை பெய்ததால் வறண்டு காணப்பட்ட சுருளி அருவியில் தண்ணீர் வர துவங்கியது.

தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுருளி அருவி முக்கியமானதாகும். இந்த அருவியில் நீராட தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் திரளாக வருகின்றனர். பொதுவாக கோடை காலத்தில் அருவி வறண்டு காணப்படும். அதாவது அருவியில் மார்ச், ஏப்ரலில் நீர் வரத்து இருக்காது. ஜுனில் அருவியில் தண்ணீர் கொட்டும். இந்தாண்டு எல்நினோ பாதிப்பு காரணமாக ஜுனில் மழை பெய்யாததால் அருவியில் பெரிய அளவில் நீர்வரத்து இன்றி காணப்பட்டது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இம்மாத துவக்கத்தில் அருவி வறண்டு பாறைகள் தெரிய துவங்கின. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இரவங்கலாறு, மணலாறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் நேற்று காலை சுருளி

அருவியில் தண்ணீர் வரத்து துவங்கியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us