/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வைகையில் இருந்து பாசனத்திற்கு நீர் நிறுத்தம்
/
வைகையில் இருந்து பாசனத்திற்கு நீர் நிறுத்தம்
ADDED : நவ 05, 2025 02:33 AM
ஆண்டிபட்டி: மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பாசனத்திற்கு கால்வாய் வழியாக சென்ற நீர் முறைப்பாசன அடிப்படையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு நிறுத்தப்பட்டது.
இம்மாவட்ட முதல் போக பாசனத்திற்காக ஜூன் 15 முதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது முறைப்பாசனம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கால்வாய் வழியாக வினாடிக்கு 1280 கன அடி வீதம் சென்ற நீர் நேற்று நிறுத்தப்பட்டது.
முறைப்பாசன அடிப்படையில் 5 நாட்களுக்குப் பின் மீண்டும் கால்வாய் வழியாக நீர் திறந்து விடப்படும் என்று நீர்வளத் துறையினர் தெரிவித்தனர். தற்போது சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக ஆற்றின் வழியாக வினாடிக்கு 2000 கன அடி நீரும், 58ம் கால்வாய் வழியாக வினாடிக்கு 150 கன அடி நீரும், குடிநீருக்காக வினாடிக்கு 69 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 67.91 அடியாக இருந்தது.

