ADDED : அக் 04, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் மேற்கு புலத்தில் விவசாய நிலங்களுக்கு செல்லும் நீர் வழிப்பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளதால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேற்கு புலம் ராணி மங்கம்மாள் ரோட்டில் இருந்து ஆலமரத்து ஈஸ்வரன் கோயிலுக்கு செல்லும் வகையில் நீர்வரத்து, வண்டிப் பாதை உள்ளது. இப்பாதையை விவசாயிகள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். தற்போது தனி நபர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் விவசாயிகள் தோட்டங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றி சென்று வருகின்றனர். விவசாயிகள் பயன் பெறும் வகையில் முறையான சர்வே செய்து ஆக்கிரமிப்பை அகற்றிட மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.