தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/'பம்ப்டு ஸ்டோரேஜ்' மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்துவது  எப்போது: கூடுதல் மின் உற்பத்தி திட்டம் அவசியம்

'பம்ப்டு ஸ்டோரேஜ்' மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்துவது  எப்போது: கூடுதல் மின் உற்பத்தி திட்டம் அவசியம்

'பம்ப்டு ஸ்டோரேஜ்' மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்துவது  எப்போது: கூடுதல் மின் உற்பத்தி திட்டம் அவசியம்


ADDED : ஆக 31, 2026 12:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2026 12:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மனித வாழ்வில் மின்சாரம் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. மின் உற்பத்தியை விட தேவை அதிகரித்து வருகிறது. மின்சாரம் நீர், காற்று, நிலக்கரி, அணு என பலவற்றை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

உயரமான இடத்தில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீரை கீழே இறக்கி மின் உற்பத்தி செய்து, அந்த தண்ணீரை மீண்டும் அணை பகுதிக்கு கொண்டு சேர்க்கும் முறை 'பம்ப்டு ஸ்டோரேஜ்' மின் உற்பத்தி முறை எனப்படுகிறது. தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் குந்தாவில் இந்த திட்டத்தில் 400 மெகா வாட் மின்உற்பத்தி நடக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை, கோவை மாவட்டம் ஆழியாறில் இத்திட்டத்தை செயல்படுத்த இரு ஆண்டுகளாக ஆய்வு நடந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் மேகமலையில் உள்ள, மணலாறு அணையில் இருந்து, தண்ணீரை இறக்கி மலையடிவாரத்தில் உள்ள நாராயணத்தேவன்பட்டி அருகே 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும், பெரியகுளம் அருகே மஞ்சளாறு அணையில் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும் ஆய்வுகள் நடந்தது. அதன் முடிவுகள் வெளியிடப் படவில்லை.

ஆய்வுகள் பற்றி மின்வாரியத்தினர் கூறுகையில், தமிழகத்தில் 11 இடங்களில் 7500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிட்டு ஆய்வுகள் நடந்து வருகிறது. கன்னியாகுமரி, கோவை, தேனி மாவட்டங்களில் முதற்கட்ட ஆய்வுகள் நடந்தது.

தேனியில் மணலாறு அணையிலிருந்து 2.4 கி.மீ. தூரத்திற்கு மலையை குடைந்து சுரங்க பாதை மூலம் தண்ணீரை நாராயணத்தேவன்பட்டி பகுதிக்கு இறக்கி 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. .

பகலில் தண்ணீரை இறக்கி மின்உற்பத்தியும், இரவில் தண்ணீரை மீண்டும் மணலாறு அணைக்கு கொண்டு செல்வது இத்திட்டத்தின் அம்சம்.

மணலாறு, மஞ்சளாறு பம்ப்டு ஸ்டோரேஜ் திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தால் மாவட்டத்தில் கூடுதலாக 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

மணலாறு அணை, மின் நிலையம் அமைக்க உத்தேசித்துள்ள இடம் மேகமலை புலிகள் காப்பாக பகுதிக்குள் வருகிறது. இதனால் மத்திய வன அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு ஆய்வு முடிகள், விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றனர்.

இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us