ADDED : மார் 26, 2026 07:50 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்:பெரியகுளம் திண்டுக்கல் ரோடு எ.புதுப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சுப்பிரமணி தலைமையிலான நிலைய கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த பெரியகுளம் தென்கரை பள்ளிவாசல் கிழக்கு தெருவைச் சேர்ந்த த.வெ.க., நிர்வாகி சிராஜ்தீன் 74, காரை சோதனை செய்தனர்.
காரில் 6 பெட்டிகளில் 72 விசில்கள்,த.வெ.க., கட்சி துண்டு 65, ஒரு கொடிக்கயிறு இருந்தது. அவற்றை பறிமுதல் செய்து நல்லகருப்பன்பட்டியில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக்கழகம் கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
--
