/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடியிருப்புகளில் உலா வரும் காட்டு மாடுகள்
/
குடியிருப்புகளில் உலா வரும் காட்டு மாடுகள்
ADDED : பிப் 16, 2025 06:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் கேரளா குமுளி அருகே விஸ்வநாதபுரம் குடியிருப்பு பகுதி சாலையில் பகல் நேரத்தில் காட்டு மாடுகள் உலா வந்தன. இதனைக் கண்ட மக்கள் அச்சமடைந்தனர். அவற்றை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்தனர்.
இப்பகுதியில் புலி, சிறுத்தை நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் ஏற்கனவே அச்சமடைந்த நிலையில் தற்போது பகலில் காட்டு மாடும் உலா வருவதால் வெளியில் வர பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி காட்டு மாடு நடமாட்டம் இருப்பதாக கூறி எச்சரிக்கை போர்டு வைத்துள்ளனர்.