ADDED : ஜூன் 28, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
மூணாறு: கேரள மாநிலம் மூணாறு அருகே படையப்பா காட்டு யானை தாக்கியதில் கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த பசு உயிரிழந்தது.
தேவிகுளம் எஸ்டேட் பகுதியை சேர்ந்த மதியழகன், தனக்கு சொந்தமான பசுவை வீட்டருகே மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். நேற்று முன்தினம் அங்கு வந்த படையப்பா காட்டு யானை, பசுவை தந்தங் களால் குத்திக் கொன்றது.
படையப்பா யானை வாகனங்களையும், விளை பொருட்களையும் சேதப்படுத்துவது வழக்கம். பலமுறை பசுக்களுடன் புல் மேடுகளில் உலா வந்தபோதும் படையப்பா யானை அவற்றை தாக்கியதில்லை. பசுவை தாக்கி கொன்றது இதுவே முதல்முறை.
