/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு யானைகளால் நெற்பயிர்கள் சேதம்
/
காட்டு யானைகளால் நெற்பயிர்கள் சேதம்
ADDED : ஜன 26, 2026 06:12 AM

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி தாலுகா சித்தையகவுண்டன்பட்டி மலை அடிவாரத்தில் வயலில் காட்டு யானைகள் புகுந்ததால் நெல் பயிர்கள் சேதம் அடைந்தன.
தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை சூழ்ந்த மாவட்டம் ஆகும். ஆண்டிபட்டியில் மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்துள்ள கணவாய், ஏத்தக்கோவில், சித்தைய கவுண்டன்பட்டி, வேலப்பர் கோயில் பகுதிகளில் கரடி, யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
நேற்று முன்தினம் மலைப்பகுதியில் இருந்து இறங்கிய யானைகள் கூட்டம், சித்தையகவுண்டன்பட்டி கண்ணன் என்பவரது நெல் வயலில் புகுந்தது.
இதனால் சாகுபடி செய்திருந்த பயிர்கள் சேதமடைந்தன. இரவில் யானைகள் இறங்கியதால் பிற விவசாயிகளும் அச்ச மடைந்துள்ளனர்.
நிவாரணம் வழங்க நடவடிக்கை: ஆண்டிபட்டி வனத்துறை ரேஞ்சர் அருள்குமார் கூறியதாவது: சபரிமலை சீசனால் அப்பகுதியில் இருந்த யானைகள் கூட்டம் இடம் பெயர்ந்துள்ளது.
மலைப்பகுதியில் இருந்து சில நாட்களுக்குப் பின் திரும்பும். யானைகளால் சேதம் அடைந்துள்ள பயிருக்கு அரசு மூலம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

