/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
காட்டு யானைகள் உலா சுற்றுலா பயணிகள் ஓட்டம்
/
காட்டு யானைகள் உலா சுற்றுலா பயணிகள் ஓட்டம்
ADDED : நவ 16, 2025 04:27 AM

மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் வந்ததால் சுற்றுலா பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.
லாக்காடு எஸ்டேட் பகுதியில் இரண்டு குட்டிகள் உள்பட நான்கு காட்டு யானைகளைக் கொண்ட கூட்டம் நடமாடின.
அவை நேற்று முன்தினம் எதிர்பாராத வகையில் கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் லாக்காடு பாக்டரி அருகே வந்தது. அந்த வழியில் சென்ற பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் யானைகளை சற்றும் எதிர்பார்க்காததால் அச்சம் அடைந்தனர். வெளிநாட்டு பயணிகள் உள்பட சுற்றுலா பயணிகள் யானைகளை போட்டோ எடுக்க முயன்றனர்.
ஆனால் யானைகள் வேகமாக வந்ததை பார்த்து ஓடி உயிர் தப்பினர். நூறு மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற யானைகள், அதன்பிறகு காட்டிற்குள் சென்றன.

