/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மேகமலையில் 1595 குடும்பங்கள் வெளியேற்றமா
/
மேகமலையில் 1595 குடும்பங்கள் வெளியேற்றமா
ADDED : அக் 26, 2025 05:18 AM
தேனி: மேகமலை புலிகள் காப்பகத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் என 1595 குடும்பத்தினரை வெளியேற்ற காப்பகம் முடிவு செய்துள்ளது என விவசாயிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
கம்பத்தை சேர்ந்த நாகராஜ், மேகமலை பகுதியில் 20 கிராமங்களில் வசிக்கும் 1595 குடும்பத்தினரை ஆக்கிரமிப்பாளர்கள் என பட்டியலிட்டு புலிகள்காப்பகம் முடிவு செய்துள்ளதாக கேள்விப்படுகிறோம். இது வதந்தியா, உண்மையா என கலெக்டர் விளக்க வேண்டும் என்றார்.
புலிகள் காப்பக உதவி வனகாப்பாளர் சாய்சரண்ரெட்டி, இது நாங்கள் எடுக்கும் முடிவு அல்ல. காப்புகாடுகளின் ஆக்கிரமித்துள்ளவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து நேரில் பேசிக்கொள்ளலாம்,' என்றார்.
இதற்கு கலெக்டர் வனத்துறை குறைதீர் கூட்டத்தில் பேசி முடிவு செய்யுங்கள். தற்போது விவசாயிகள் கூட்டத்தில் பேசினால் சில சிக்கல்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது என்றார்.

