/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு மருத்துவமனைகளில் ரத்த சேமிப்பு வங்கிகள் ஏற்படுத்தப்படுமா? இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ADDED : டிச 01, 2025 06:15 AM

மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனை, கம்பம், போடி அரசு மருத்துவமனைகளில் ரத்த வங்கிகள் உள்ளன. போடி, கம்பம் அரசு மருத்துவ மனைகளில் தலா 40 யூனிட்டுகள் வரை இருப்பு இருக்கும் வசதி உள்ளது.
பெரியகுளத்தில் மட்டும் 740 யூனிட்டுக்கள் வைக்கும் திறன் கொண்டது. (ஒரு யூனிட் என்பது 350 மில்லியாகும்). கடந்த சில ஆண்டுகளாகவே மாவட்ட ரத்த வங்கிகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்திற்கு ஓராண்டிற்கு 11 ஆயிரம் யூனிட் ரத்தம் தேவை. ஆனால் இதில் 50 உதவீதம் மட்டுமே முகாம்கள் மூலம் பெறப்படுகிறது. மீதியுள்ள ரத்தத்தை கொடையாளர்கள் மூலம் பெற சிரமம் ஏற்படுகிறது. ரத்தம் அரசால் வழங்கப்படாததும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.
மேலும் ரத்த சேமிப்பு வங்கி இல்லாத உத்தமபாளையம், சின்னமனுார், ஆண்டிபட்டி அரசு மருத்துவமனைகளிலும் ரத்த சேமிப்பு வங்கிகள் ஏற்படுத்த வேண்டும்.
பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் டாக்டர் பாரதி கூறியதாவது: ஏ, பி, ஓ, ரத்த வகைகளில் 'பாசிட்டிவ்', 'நெகட்டிவ்', என 8 வகைகள் உள்ளன. இதில் 'AB' நெகட்டிவ் ரத்த வகை தட்டுப்பாடாக இருக்கும். ரத்தத்தை 35 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது. செயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது என்பதால், கொடையாளர்களை நம்பியே உள்ளோம்.
கல்லுாரிகளில் இப்போது நன்றாக விழிப்புணர்வு செய்து வந்தாலும், கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வில்லை. ரத்தம் கொடுப்பதால் ஒருவருக்கு பாதிப்பு எதுவும் இல்லை. இன்னமும் சொல்ல வேண்டும் என்றால், ஆரோக்கியமாக உள்ள ஒருவர் குறிப்பிட்ட காலக்கெடுவில் ரத்தம் தானம் செய்வது அவரது ஆரோக்கியம் மேம்படும். வாழ்நாட்கள் அதிகரிக்கும், என்றார்.