UPDATED : ஆக 15, 2026 04:32 PM
ADDED : ஆக 15, 2026 04:20 PM
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி வாரச்சந்தையில் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 256 கடைகள் கொண்ட புதிய வணிக வளாக கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டிபட்டி வாரச்சந்தை ஒவ்வொரு திங்கட்கிழமையும் கூடும். வாரச்சந்தையில் உள்ள 200க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகள் சேதம் அடைந்து மழை, வெயிலால் பாதிக்கும் நிலையில் உள்ளது. வாரச்சந்தை வியாபாரிகளின் வசதிக்காக ரூ.6 கோடி மதிப்பில் 256 கடைகள் கொண்ட புதிய வணிக வளாக கட்டிடம் கட்டுமான பணி 7 ஆண்டுக்கு முன் துவங்கியது. ஆமை வேகத்தில் நடந்த பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது. புதிய வணிக வளாக கட்டிடத்தில் உள்ள கடைகளை வியாபாரிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை இன்னும் துவங்கவில்லை. கடைகள் உரிமம் பெறுவதற்கு, டெண்டர் விடுவதற்கான நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
