UPDATED : ஜூலை 05, 2026 09:14 PM
ADDED : ஜூலை 05, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
மூணாறு:மூணாறு அருகே போதமேட்டில் பெட்டிக் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக மூணாறு போலீசாருக்கு புகார் சென்றது.
இன்ஸ்பெக்டர் பினோத்குமார் தலைமையில் போலீசார் போதமேடு பகுதியில் பெரியகுளம், தேவதானபட்டியைச் சேர்ந்த லட்சுமி 72, என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அங்கு 150க்கும் மேற்பட்ட தடை புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்கு இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து லட்சுமியை கைது செய்தனர்.
