ADDED : ஜூன் 03, 2026 11:43 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: தேனி அருகே பூதிப்புரம் மேலத்தெரு புலிக்குமார்.இவரது மனைவி சித்ராதேவி 41. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
சில தினங்களுக்கு முன் டூவீலரில் சித்ரா தேவியை உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு புலிக்குமார் அழைத்து சென்றார். ஜல்லிபட்டி பைபாஸ் ரோடு அருகே சென்ற போது, முன்னாள் சென்ற வாகனத்தில் மோதாமல் இருக்க திடீரென பிரேக் போட்டார். அப்போது நிலை தடுமாறி சித்ராதேவி கீழே விழுந்தார்.
அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சித்ராதேவி நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது சகோதரர் மணிகண்டன் புகாரில் தென்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
