அடிப்படை வசதிகள் கோரி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுடன் பெண்கள் வாக்குவாதம்
அடிப்படை வசதிகள் கோரி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுடன் பெண்கள் வாக்குவாதம்
ADDED : பிப் 03, 2026 05:34 AM

பெரியகுளம்: பெரியகுளம் நகராட்சி, 13வது வார்டில் அடிப்படை வசதிகள் கோரி, தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம், மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், பெ ரியகுளம் எம். எல்.ஏ., சரவணக்குமார், நேற்று நகராட்சி, 13வது வார்டு அம்பேத்கர் நகரில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 88.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய விளையாட்டு மைதானம், நகராட்சி கொய்யா தோப்பில், 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நுாலக கட்டடத்தை திறந்து வைத்தார்.
நகராட்சி தலைவர் சுமிதா, கமிஷனர் தமிஹா சுல்தானா, தி.மு.க., நகர செயலர் முகமது இலியாஸ், வார்டு கவுன்சிலர்கள் இதில் பங்கேற்றனர்.
அப்போது, அங்கு வந்த மக்கள், 13வது வார்டில் தெருவிளக்குகள், சாக்கடை உட்பட, அடிப்படை வசதிகள் இன்றி சிரமம் அடைவதாகவும், ஏன் வசதிகள் செய்து தரவில்லை என, கேள்வி எழுப்பி, எம்.எல்.ஏ.,விடம் வாக்குவாதம் செய்தனர்.
இதையடுத்து, நகராட்சி பணியாளர்களிடம், மக்கள் கோரிக்கையை கேட்டறியுமாறு கூறியபடி, சரவணக் குமார் காரில் ஏறி சென்றார். வாக்கு வாதத்தில் ஈடுபட்ட பெண்களை, போலீசார் சமாதானம் செய்தனர்.
