நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அரசு பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா முதல்வர் வசந்த நாயகி தலைமையில் நடந்தது. மதுரை நீர்வளத்துறை உதவி பொறியாளர் மேரி பபிதா, அகத்தியா நேச்சுரல் நிறுவன இணைய இயக்குனர் நித்யா முன்னிலை வகித்தனர்.
மாணவ செயலாளர் அனுஷா வரவேற்றார். விழாவில் மாணவிகளுக்கான பரதம், நடனம், இசை வாத்தியம், சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. மாணவி பவித்ரா நன்றி கூறினார்.

