ADDED : மார் 13, 2026 06:47 AM
அ நிறம் | அளவு
போடி: தர்மத்துப்பட்டியில் ஏ.எச்.எம்., டிரஸ்ட், தேசாய் கல்வி நிறுவனம், சக்தி பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மகளிர் தின விழா நடந்தது. டிரஸ்ட் நிறுவனர் தேசாய் தலைமை வகித்தார். இயக்குனர் ஸ்டெல்லா, மேலாண்மை இயக்குனர் முகமது சேக் இப்ராகிம், டாக்டர் புருஸ்டீ ஜாங் முன்னிலை வகித்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் மஞ்சு, சக்தி பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப் பாளர் ஜீவா வரவேற்றனர்.
ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்சாண்டர், டாக்டர் மனோரஞ்சன், சிந்தலைச்சேரி மதர் தெரசா கல்லூரி முதல்வர் சோபியா மேரி, போடி அரசு பொறியியல் கல்லூரி பேராசிரியர் உமா மகேஸ்வரி பேசினர். லயன்ஸ் கிளப் முன்னாள் தலைவர்கள் மோகன்சிங், பாலசுப்பிரமணி, மோகன்ராஜ், நவநீதகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பரிசுகள் வழங்கப்பட்டன.
