/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி துவக்கம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி துவக்கம்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி துவக்கம்
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி துவக்கம்
ADDED : டிச 12, 2025 06:24 AM
தேனி: சட்டமன்ற தேர்தலுக்காக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட ஆய்வு செய்யும் பணி நேற்று துவங்கியது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டபை தேர்தல் நடக்கிறது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் விரைவு படுத்தி உள்ளது. தேர்தலுக்காக ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்யும் பணி துவங்கி உள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை கலெக்டர் ரஞ்ஜீத்சிங் முன்னிலையில் திறக்கப்பட்டது. பெங்களூரு பெல் பொறியாளர் பிரவீன் தலைமையிலான குழுவினர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்தனர்.
பாதுகாப்பு அறையில் கன்ட்ரோல் யூனிட் 1870, இதற்கான பேட்டரிகள் 400, பேலட் யூனிட் 3013, வி.வி.பேட் 1970. வி.வி.,பேட் பேட்டரிஸ் 3850, பேப்பர் ரோல் 1500 உள்ளன. 2026 ஜன., 15க்குள் அனைத்து இயந்திரங்களையும் சோதனை செய்து முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

