ADDED : ஏப் 20, 2026 11:34 PM

தேனி:தேனி கலெக்டர் அலுவலகத்தில் நுண்பார்வையாளர்களுக்கு கணினியில் குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு , 2 ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது.
மாவட்டத்தில் 189 அமைவிடங்களில் 240 பதட்டமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பதட்டமான ஓட்டுச்சாவடிகளை நிர்வகிக்க நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொகுதி வாரியாக ஆண்டிபட்டி 73 பேர், பெரியகுளம்(தனி) 52 பேர், போடி 53பேர், கம்பம் 62 பேர் என 240 பேர் நியமனம் செய்யபட்டுள்ளனர். நுண்பார்வையாளர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நுண்பார்வையாளர்களின் பணி, தகவல் பரிமாற்றம், படிவங்கள் பூர்த்தி செய்தல் உள்ளிட்டவை பற்றி விளக்கப்பட்டது.
நுண்பார்வையாளர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடந்தது. தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் பீம்சிங், வினய்பிரதாப் சிங் முன்னிலை வகித்தனர். டி.ஆர்.ஒ., ராஜகுமார், கலெக்டர் நேர்முக உதவியாளர் ராமகிருஷ்ண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
