கலெக்டர் அலுவலகம் எதிரே ரயில்வே பிளாட்பாரம் அமைக்கும் பணி மந்தம்
கலெக்டர் அலுவலகம் எதிரே ரயில்வே பிளாட்பாரம் அமைக்கும் பணி மந்தம்
ADDED : ஏப் 27, 2026 03:38 PM
தேனி:தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே ரயில்வே பிளாட்பாரம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தேனியில் மதுரை ரோட்டில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே புதிதாக ரயில்வே பிளாட்பாரம் அமைக்கும் பணி சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. அகல ரயில்பாதையாக மாற்றிய போது அங்கிருந்த ரயில்வே பிளாட்பாரம் அகற்றப்பட்டது.பல ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் ரயில்வே பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. ஆனால், ஓராண்டிற்கும் மேலாக மந்த கதியில் ரயில்வே பிளாட்பாரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பிளாட்பாரம் மார்ச் 2025க்குள் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால், இதுவரை பணிகள் முடியவில்லை. பிளாட்பாரம் அமைக்கும் பணி சில மாதங்கள் நடைபெறுவதும், சில மாதங்கள் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்படுவதும் தொடர்கிறது. பிளாட்பார பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மண்டல ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், தேனி கலெக்டர் அலுவலகம் எதிரே ரயில்வே பிளாட்பாரம் அமைக்கும் பணி 2027 மார்ச், ஏப்ரல் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
