ADDED : பிப் 14, 2026 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கூலி தொழிலாளி இளங்கோவன் 48,க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி பகுதியை சேர்ந்த சிறுமியிடம் இளங்கோவன் 48, கடந்த 2024ல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
சிறுமி பெற்றோரிடம் கூறினார். பெற்றோர் புகாரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் இளங்கோவனை கைது செய்தனர். வழக்கு விசாரணை தேனி போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. இவ்வழக்கில் நீதிபதி கணேசன் வழங்கிய தீர்ப்பில் இளங்கோவனுக்கு 5 ஆண்டுகள் சிறை,ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார்.
மாநில அரசு அபராத தொகையுடன் சேர்த்து சிறுமிக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடு வழங்க பரிந்துரைத்தார்.
அரசு வழக்கறிஞர் ரக்ஷிதா ஆஜரானார்.

