UPDATED : செப் 23, 2026 03:42 PM
ADDED : செப் 23, 2026 03:31 PM
அ நிறம் | அளவு
மூணாறு:இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை அருகே பேத்தொட்டியில் குடல் இறக்கம் நோயால் பாதிக்கப்பட்ட மத்தியபிரதேசம், மாண்டியா பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சமர்லால் 26, இறந்தார்.
அப்பகுதியில் ஏலத்தோட்டத்தில் வேலை செய்து வந்தவர் நேற்று சுய நினைவற்ற நிலையில் கிடந்தார். அவரை சக தொழிலாளர்கள் ராஜகுமாரியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சமர்லாலை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்த விட்டதாக தெரிவித்தனர்.
சாந்தாம்பாறை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பிரேத பரிசோதனையில் குடல் இறக்கம் நோயால் பாதிக்கப்பட்டு சமர்லால் இறந்ததாக தெரியவந்தது.
