UPDATED : நவ 12, 2026 05:27 PM
ADDED : நவ 12, 2026 05:22 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டியைச் சேர்ந்தவர் சிவதேசிங்கு 26.
எழுவனம்பட்டியில் தனியார் மில்லுக்கு டூவீலரில் வேலைக்கு செல்லும் போது, சாத்தாகோவில்பட்டி பஸ்ஸ்டாப் அருகே எதிரே வந்த வேன், சிவதேசிங்கு மீது மோதியது. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவசேதிங்கு அனுமதிக்கப்பட்டு இறந்தார். விபத்து ஏற்படுத்திய புதுக்கோட்டை மாவட்டம், பெரும்பாவூரைச் சேர்ந்த வேன் டிரைவர் கர்ணாகரனை தேவதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
